கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (09) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடைக்கால அரசாங்கம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்ஷா தெரிவித்தார்.
அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் கொண்ட குழுவினர் இடைக்கால அரசாங்கம் தொடர்பில் யோசனையொன்றை கூட்டு எதிரணிக்கு முன்வைத்துள்ளது. இது தொடர்பில் இன்று மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கலந்துரையாடவுள்ளோம் எனவும் அவர் மேலும் கூறினார்.
நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
இதேவேளை, இன்று இரவு நடைபெறவுள்ள கூட்டு எதிரணியினரின் கலந்துரையாடலுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் வைத்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.