பொருளாதார நெருக்கடியை சந்திக்கத் தயாராகுமாறு நிதி அமைச்சு, வெளிநாட்டு வர்த்தக அமைச்சு, கைத்தொழில் அமைச்சு மற்றும் மத்திய வங்கி என்பவற்றுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தல் விடுத்துள்ளார்.
அமெரிக்காவினால் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் காரணமாக எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் ஈரானுக்கு தேயிலை ஏற்றுமதி தடைப்படப் போவதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதவிர, அமெரிக்காவினால் சீனா மீது விதிக்கப்பட்டுள்ள அதிக இறக்குமதி வரியின் காரணமாக சீன அரசாங்கம் எதிர்காலத்தில் இலங்கைக்கு எந்தவித பொருளாதார உதவியையும் செய்ய முன்வராது என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால், சர்வதேச நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து ரூபாவின் பெறுமதியைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் மேற்படி துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.