பிரிட்டிஷ் கொலம்பிய இளைஞர் முகாமில் காணாமல் போன கொரிய மாணவன்.
கனடா- தென் கொரியாவை சேர்ந்த உயர்தர பாடசாலை மாணவன் ஒருவன் பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒதுக்குப்புற முகாமில் பங்குபற்றிய சமயத்தில் காணாமல் போய்விட்டான்.இவனை தேடும் முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது.
ஹன்வூ லீ என்ற 19வயது தென் கொரிய பிரசையான இவன் புதன்கிழமை பிரிட்டிஷ் கொலம்பிய பவெல் றிவர் பகுதியில் காணாமல் போய் உள்ளான்.
வன்கூவரில் மலைகளால் சூழப்பட்ட் பிரின்சஸ் லூசியா இன்லெட் பகுதியில் அமைந்துள்ள மலிபு கிளப் எனப்படும் முகாமில் லீயின் பாடசாலை குழுவினர் இருந்துள்ளனர். படகு அல்லது விமானம் மூலம் மட்டுமே இப்பகுதிக்கு செல்ல முடியும்.கடந்த சனிக்கிழமை குறிப்பிட்ட முகாமிற்கு லீ சென்றான்.
முகாமிற்கு அருகாமையில் உள்ள வேகமாக ஓடும் தண்ணீருக்குள் லீ சென்றிருக்கலாம் என கருதப்படுகின்றது.
இது ஒரு சோகமான விபத்தாகும். லீயின் பெற்றோர் சியோலில் இருந்து வன்கூவர் வந்து கொண்டிருக்கின்றனர்.
தேடுதல் முயற்சிகள் தொடர்கின்றன.
– See more at: http://www.canadamirror.com/canada/64033.html#sthash.UvSWAtBM.dpuf