அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய சகோதரிகள் இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தங்கள் கையை பிடித்த நிலையில் இருந்த புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
அமெரிக்காவின் Michigan பகுதியில் உள்ள தன் பாட்டியின் வீட்டிற்கு Riley Robinson(12) மற்றும் Peyton(14) சகோதரிகள் ATV வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது வாகனம் கட்டுப்பாட்டை மீறி மரத்தில் மோதியதால், இருவரும் படுகாயமடைந்தனர். இதனால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்தது. இதில் 12 வயதான Riley Robinson படுக்கையில் இருந்த போது, அருகில் இருந்த அக்காவான Peyton-னின் கையை பிடித்தார்.
இதை உணர்ந்த Peyton உடனடியாக அவரின் நடு விரலை கெட்டியாக பிடித்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், Riley Robinson சில மணி நேரங்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதில் Peyton-க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தின் காரணமாக அவரது மூக்கு, கண் மற்றும் உடல்களில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Riley Robinson இறப்பதற்கு முன்பு தன் அக்காவின் கையை பிடித்துக் கொண்டிருந்த புகைப்படம் வெளியாகி அனைவரது கண்களையும் கலங்க வைத்துள்ளது என்று கூறலாம்.