நாட்டில் தற்பொழுது நிலவும் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப டொலரின் பெறுமதி எதிர்வரும் 2019 ஆண்டு மார்ச் அல்லது ஏப்றல் மாதம் ஆகும் போது 200 ரூபாவைத் தாண்டும் என பொருளியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதிகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது டொலர் விலையேற்றத்தைத் தடுப்பதற்கான பிரதான வழிமுறையெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
டொலர் விலை அதிகரிப்பினால் பல நிறுவனங்களும் நட்டமடைந்து சில மூடப்படும் ஆபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.