இலங்கைக்கான வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக நேற்று இலங்கை அரசாங்கம் புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
அதாவது வாகன இறக்குமதிக்காக வணிக வங்கிகளில் கடன் கடிதங்களை திறக்கும் போது நூற்றுக்கு நூறு வீதம் உயர் பணவைப்பை கட்டாயமாக பேண வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக இந்த அறிவிப்பு வெளியானது.
இதன்படி வியாபார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களைத் தவிர மற்றைய அனைத்து வாகனங்களுக்கும் இது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் தேவையற்ற வாகன இறக்குமதிகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.