பாண் ஒன்றின் விலையை ஐந்து ரூபாவினால் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, சந்தையில் காணப்பட்ட 60 ரூபா பெறுமதியான பாண் ஒன்று மீண்டும் பழைய விலைக்கே (55 ரூபா) விற்பனை செய்யப்படும் எனவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.
கோதுமை மாவுவின் விலையை மீண்டும் பழைய விலைக்கே விற்பனை செய்வதற்கு வர்த்தகத்துறை அமைச்சர் ரஷாட் பத்தியுத்தீன் இணக்கம் தெரிவித்ததனால் இந்த தீர்மானம் பெறப்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் கூறியுள்ளது.
எதிர்வரும் ஓரிரு தினங்களில் பாணின் விலையை பழைய விலைக்கே விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்துக்கும் அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீனுக்கும் இடையில் நேற்று (19) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அச்சங்கத்தின் உறுப்பினர் என்.கே. ஜயவர்தன அறிவித்துள்ளார்.