உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 6வது முறை தேர்வான ஏஞ்சலா மெர்கல்
உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக தொடர்ந்து ஆறாவது முறையாக தேர்வாகியுள்ளார் ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்கல்.
அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் 11வது முறையாக உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலை வெளியிட்டு உள்ளது இதில் ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் முதல் இடத்த்ல் உள்ளார். ஏஞ்சலா கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கி 6 முறை இந்த பட்டியலில் முதலிடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
இந்த பட்டியலில் முதன் முறையாக இடம் பிடித்துள்ள ஸ்காட்லாந்து அரசியல்வாதியான நிக்கோலா ஸ்டர்ஜியன் 50-வது இடத்தில் உள்ளார்.
ஏஞ்சலா மெர்கலுக்கு அடுத்த இடத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாக வாய்ப்புகள் உள்ள ஹிலாரி கிளிண்டன் உள்ளார். மூன்றாவது இடத்தில் இருப்பவர் அமெரிக்க மத்திய வங்கிகளுக்கான முதன்மை அதிகாரியாக பணியாற்றிவரும் ஜேனட் யெல்லென்.
4வது மற்றும் 5வது இடங்களில் மெலிண்டா கேட்ஸ் மற்றும் ஜெனரல் மோட்டோர் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியான மேரி பர்ரா ஆகியோர் உள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மீச்செல் 13வது இடத்திலும், இவரை அடுத்து 14 வது இடத்தில் இந்திரா நூயி உள்ளார்.இந்தியாவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் அருந்ததி பட்டாச்சார்யா 25 வது இடத்தில் உள்ளார்.மியான்மர் ஆங் சான் சூ கி 26 வது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து மகாராணியார் 29-வது இடத்திலும் உள்ளனர். ராணி எலிசபெத் கடந்த ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் 49வது இடத்தில் இருந்தார்.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 36 வது இடத்தில் உள்ளார்.