வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பாரம்பரிய நெசவு உற்பத்தி மற்றும் பெண்களுக்கான கைப்பணித் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், தற்போது நடைமுறைப்படுத்திவரும் செயற்திட்டத்தை 2019ஆம் ஆண்டு வரை நீடிக்கவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பானைத் தளமாகக் கொண்ட சர்வதேச ஆராய்ச்சி நிலையம் இதற்கான அனுசரணையை வழங்குகின்றது.
ஏற்றுமதி செயன்முறை உள்ளடங்கிய வகையில் விசேட வேலைத்திட்டமொன்றை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.