கொழும்பு – 2, பார்க் வீதி பகுதியில் இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று (13) அதிகாலை தீ பரவியுள்ளது.
இதன்போது, குறித்த கட்டடத்தின் மேல்மாடி முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 6 மணியளவில் குறித்த இந்தக் கட்டடத்தில் தீ பரவியுள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.