ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஏனவே இலங்கைக்கு இந்த பிரேரணைகளை அமுலாக்குவதற்கு இரண்டு ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் முழுமையாக இந்த பிரேரணைகள் அமுலாக்கப்படவில்லை.
இந்தநிலையில் அரசாங்கம் மேலதிக காலத்தை கோரலாம் என்று கூறப்படுகின்ற நிலையில், அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்று, அதன் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தனிடம் வினவப்பட்டது.
இதற்கு பதில் வழங்கிய அவர் மீண்டும் அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்குவது மிகப்பெரிய தவறாக அமையும் என்று குறிப்பிட்டார்.