சோகத்தில் முடிந்த கல்வி சுற்றுலா: ஆற்றில் பேருந்து விழுந்ததில் 14 பேர் பலி
துருக்கி நாட்டில் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கி பேருந்து ஆற்றில் விழுந்ததில் 14 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியில் உள்ள Karapete என்ற நகரில் பெயர் வெளியிடப்படாத தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது.
இந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என 40 பேர் நேற்று கல்வி சுற்றுலா சென்றுவிட்டு கல்லூரிக்கு திரும்பியுள்ளனர்.
அப்போது, பேருந்து Osmaniye என்ற நகருக்கு அருகில் உள்ள ஒரு பாலத்தின் மீது சென்றபோது ஓட்டுனர் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளார்.
இதனால் பாலத்தின் சுவரை உடைத்துக்கொண்டு பேருந்து ஆற்றில் பாய்ந்துள்ளது. விபத்து நிகழ்ந்து சில நிமிடங்களில் மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர். எஞ்சிய 26 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கல்வி சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ள இந்த விபத்து தொடர்பாக அந்நாட்டு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.