ஆள்களைப் பதிவு செய்து அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஆள்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
கட்டணத் திருத்தம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.
புதிய கட்டண திருத்தத்துக்கு அமைவாக, 15 வயதைப் பூர்த்தியடைந்து முதற் தடவையாக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்துக்கு 100 ரூபாஅறவிடப்படும்.
அத்துடன், தேசிய அடையாள அட்டையொன்றில் திருத்தம் மேற்கொண்டு அதன் பிரதியைப் பெற்றுக்கொள்வதற்கு 250 ரூபா அறவிடப்படும்.
மேலும், காணாமல்போன தேசிய அடையாள அட்டையொன்றின் பிரதியைப் பெற்றுக்கொள்வதற்கு 500 ரூபாஅறவிடப்படும்.
குறிப்பிட்ட கட்டணங்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து பிரதேச செயலகங்களின் ஊடாகவோ அல்லது கிராம சேவகர் ஊடாகவோ செலுத்த முடியும்.
அவ்வாறு பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளப்பட்ட பற்றுச்சீட்டினை விண்ணப்பத்தில் இணைத்து ஆட்பதிவு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.