ென்னையில் பர்தா அணிந்து வந்த பெண், பூஜை நடத்திக் கொண்டிருந்த மந்திரவாதி மீது ரசாயனம் ஊற்றி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சையது பசீருதீன் (63) என்பவர் திருவல்லிக்கேணியில் மந்திரம் ஓதும் தொழில் செய்து வந்தார்.
தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சையதிடம் தொழில் வளர்ச்சி, குடும்ப பிரச்னை, தீராத நோய் உள்பட பலவற்றிக்காக தாயத்தை பெற்று செல்வார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சையது அறையில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மந்திரம் செய்த தாயத்தை பெற்று கொண்டிருந்தனர்.
அப்போது, கருப்பு நிற பர்தா அணிந்து கொண்டு அங்கு ஒரு பெண் வந்த நிலையில் தான் வைத்திருந்த ரசாயனம் போன்ற திரவத்தை சையது மீது வீசிவிட்டு ஓடிவிட்டார்.
இதையடுத்து வலியால் துடித்த சையது மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த பெண் சம்பவத்தின் போது பர்தா அணிந்து வந்ததால் அவரை அடையாளம் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், பெண்களுடனான தவறான பழக்கத்தால் இந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது.
ரசாயன திரவம் ஊற்றிய பெண் மந்திரவாதி சையத்தால் ஏமாற்றப்பட்டவர் என்று கூறப்படுகிறது.