தம்புள்ளையில் அழகு கலை நிலையத்தில் இருந்து இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிரியாகம, ரணவ பிரதேசத்தில் உள்ள அழகு கலை நிலையத்தின் உரிமையாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் அதே பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான அனுபிக்கா தனஞ்சனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு பிள்ளை தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்கிரியாகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று இரவு இந்த சடலம் மீக்கப்பட்டுள்ளது.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதனை போன்று சடலம் தொங்கவிடப்பட்டிருந்த நிலையில், அதற்கு அருகில் பல வகையான மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த பெண் நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டிருந்தார் என முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.