மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.இந்தந் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர் அரபுக்கல்லூரி இறுதியாண்டு மாணவர்களான ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த ஷாகீர், மீராகேணி சாஜித் ஆகியோரே சாவடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரெதிதென்னை, ஜெயந்தியாவ குளத்தில் நண்பர்களுடன் தோணியில் சென்றுள்ளனர்.
இதன்போது தோணி கவிழ்ந்ததில் மாணவர்கள் இருவரும் நீரில் மூழ்கி சாவடைந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.