கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியிலிருந்து இன்று காலை மீட்கப்பட்ட பெண் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
முல்லைத்திவு திருமுருகண்டி வசந்த நகரை சேர்ந்த, 32 வயதான கருப்பையா நித்தியாகாலா என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரணைமடு நீர்ப்பாசன கால்வாய்க்குள் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்த நிலையில் அதன அடிப்படையில் அப்பகுதிக்கு கிளிநொச்சி பொலிஸார் விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து சடலம் கிடந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சடலத்தின் அருகிலிருந்து சிவில் பாதுகாப்பு படையாளிகள் அணியும் இடுப்புப்பட்டி மற்றும் பேனை என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த இளம் பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது