ஐரோப்பியர்கள் வருவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் இந்து சமுத்திரத்தினூடான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வியட்நாமில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகளில் இன, மத கலாசார பிரச்சினைகள் காணப்படவில்லை. இந்து சமுத்திர பிராந்திய வர்த்தகர்கள் ஆபிரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடந்தகால சம்பிரதாயங்களை மீண்டும் உருவாக்கி இந்து சமுத்திரத்தில் சுதந்திர கப்பற் பயணத்தை உறுதி செய்வதன் மூலம் சிறந்த வளமான எதிர்காலத்தை உருவாக்க சந்தர்ப்பம் ஏற்படுமெனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.