‘தேவி’, ‘லக்ஷ்மி’ படங்களைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய்யும், பிரபுதேவாவும் மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்கள் என்று சில வாரங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. இவர்கள் இருவரும் முதன்முதலாக இணைந்த ‘தேவி’ மக்களிடம் ஓரளவு வரவேற்பு பெற்றது.
அதையடுத்து ‘லக்ஷ்மி’ என்ற படத்தில் இருவரும் இணைந்தனர். நடனம் மற்றும் இசையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் கடந்த வாரம் வெளியானது.
லக்ஷ்மி படம் தயாரிப்பில் இருந்தபோது, இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் பிரபுதேவாவை வைத்து ‘தேவி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்திருந்தார் ஏ.எல்.விஜய்.
பிரபுதேவா தற்போது நடித்து வரும் ‘யங் மங் சங்’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘காமோஷி’ படங்களில் நடித்து முடித்த பிறகு இந்த படம் துவங்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் லக்ஷ்மி படத்தின் ரிசல்ட் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் ‘தேவி-2’ படத்தை சற்று தள்ளி வைத்திருக்கிறாராம் பிரபுதேவா.