ஆர்க்டிக் கடலில் ஐஸ் இல்லாமல் போகும் ; ஒரு லட்சம் ஆண்டுகளில் நடக்கும் அதிசயம்
பனியால் சூழப்பட்டிருக்கும் ஆர்க்டிக் கடலில் ஐஸ் தன்மை இல்லாமல் போகும் என அமெரிக்க கேம்பிரிட்ஜ் பல்கலை., கூறியுள்ளது. இது போன்று நடப்பது கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளில் தற்போது வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கேம்பிரிட்ஜ் பேராசிரியரான பீட்டர் வாதம்ஸ் கூறியிருப்பதாவது: அமெரிக்க பனி கண்காணிப்பு மற்றும் பனி தகவல்கள் சேகரிக்கும் மையம் ஒரு தகவல் தெரிவிக்கிறது. இதன்படி, ஜூன் 1 ல் 11.1 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பனி படர்ந்திருப்பது அறியப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் சராசரியாக 12. 7 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பகுதி பனி இருந்தது. இது தற்போது 1.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பு குறைந்துள்ளது. இது தொடர்ந்து குறையும் பட்சத்தில் இந்த ஆண்டிலோ அல்லது அடுத்து ஆண்டிற்குள்ளோ பனி இல்லா பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதுவும் முழுமையாக மாறாது. ஆர்க்டிக் கடலின் மத்திய அல்லது வடக்கு பகுதியில் இது நிலவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கடந்த ஒரு லட்சம் ஆண்டிற்கு முன்னதாக இது போன்று நடந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்க்டிக் பெருங்கடல் அல்லது ஆர்க்டிக் சமுத்திரம் உலகிலுள்ள ஐந்து பெருங்கடல்களுள் மிகச் சிறியதும் ஆழமற்றதாகும். புவியின் வடமுனை இச்சமுத்திரத்திலேயே உள்ளது. இது முழுமையாக புவியின் வடவரைக்கோளத்தில் அமைந்துள்ளது. இச்சமுத்திரம் புவியின் குளிர்மையான பிரதேசங்களில் ஒன்றாகும். முற்காலத்தில் கடற்பனியால் மூடப்பட்டிருந்த இப்பெருந்கடல் தற்போது காலநிலை மாற்றம் காரணமாகப் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளது.
இது போல் மற்றொரு ஆய்வில் பூமியும், செவ்வாயும் மிக அருகருகே இந்த மாதத்தில் வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.