பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்படும் முச்சக்கர வண்டி சாரதிகளின் வயதெல்லை உட்பட புதிதாக உருவாக்கப்பட்ட சட்டங்கள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
குறித்த யோசனை போக்குவரத்து அமைச்சினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை நிராகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் இந்த யோசனைக்கு அமைச்சரவையில் தனது எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.