உலகெங்கும் கத்தோலிக்க பாதிரியார்களின்பாலியல் அத்துமீறலால் பாதிக்கபட்டோரிடம் போப் ஆண்டவர் மன்னிப்பு கோரி உள்ளார்.
கிறித்துவ தேவாலயங்களில் பாவ மன்னிப்புக் கோரி வரும் பெண்கள் மற்றும் கிறித்துவ காப்பகங்களில் உள்ள குழந்தைகள் ஆகியோரிடம் கத்தோலிக்க பாதிரியார்கள் பாலியல் அத்துமீறல்கள் புரிவது அதிகமாகி வருகிறது. பல நாடுகளில் இது குறித்து ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன.
இந்த புகார்கள் குறித்து கத்தோலிக்கர்களின் தலைமை குருவான போப் ஆண்டவர் மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். தற்பொதைய போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் கத்தோலிக்க தலைமையகமான வாடிகனில் இருந்து கடிதம் ஒன்றை அனைத்து கத்தோலிக்க மக்களுக்கும் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில், ”கத்தோலிக்க குருமார்கள் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதற்கு நான் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிரியார்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துக் கொள்ள வேண்டும். இந்த பாலியல் அத்துமீறல்களில் பாதிக்கப்பட்டோரிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.