96 வயதில் பட்டம் பெற்ற முதியவர்
ஜப்பானில் 96 வயதில் பல்கலைகழக பட்டம் பெற்று முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஜப்பானின் ஹிரோஷிமா பகுதியில் கடந்த 1919ம் ஆண்டு பிறந்தவர் ஷிகிமி ஹிராடா.
படிப்பின் மேல் கொண்ட தீராத காதலால் கடந்த ஆண்டு செராமிக் பிரிவில் கியோட்டோ பல்கலைகழகத்தில் சேர்ந்தார்.
இளநிலை பட்டப் படிப்பையும் நிறைவு செய்தார், இதற்கான பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.
இதன்மூலம் உலகிலேயே மிக அதிக வயதில் பட்டம் பெற்ற நபர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
இதுகுறித்து ஹிராடா கூறுகையில், 100 வயது வரை வாழ்வதே தனது லட்சியம் என்றும், உடல் தகுதியுடன் இருந்தால் முதுகலை பட்டம்கூட பெறுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.