தீயிலிருந்து குடும்பத்தினரை காப்பாற்றிய சிறுவன்.
கனடா- தங்கள் மகன் இல்லையென்றால் தனது முழு குடும்பமும் தீயிலிருந்து தப்பியிருக்க முடியாதென அவனின் தந்தை தெரிவித்தார். இவர்கள் குடியிருந்த தொடர்மாடிக்கட்டிடத்தின் இரண்டாவது யுனிற் முழுவதும் தீக்கிரையாகிவிட்டது.
ஒசாவா, ஒன்ராறியோவில் வசித்த ஏழு பேர்கள் கொண்ட குடும்பம் ஒன்று தீச்சுவாலையில் இருந்து தப்பியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற தீயினால் இச்சம்பவம் நடந்தது.
மனிதர்கள் தப்பிவிட்டனர் ஆனால் இரு பூனைகளும் நாய் ஒன்றும் தீக்குள் அகப்பட்டு இறந்துவிட்டன.
பிள்ளைகளில் மூத்தவன் தீச்சுவாலையை கண்டதும் பெற்றோர்களை விரைவில் எழுப்பிவிட்டான். மூத்த மகன் இல்லையென்றால் நாங்கள் இருந்திருக்க மாட்டோம் என தந்தை செய்தியாளரிடம் தெரிவித்தார்.
பழம் பொருட்கள் விற்பனையாகும் கடைக்கு மேல் குறிப்பிட்ட அப்பார்ட்மென்ட் அமைந்திருந்தது.
குடும்பத்தினர் அவர்களது உடமைகள் எதற்கும் காப்புறுதி எடுத்திருக்கவில்லை. தீக்கான காரணத்தை அதிகாரிகள் விசாரனை செய்து வருகின்றனர்.