மஹிந்தவை புலிகளுக்கு பலியாக்க வேண்டாம்!- ஒன்றிணைந்த எதிர்க்கட்சி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பினை நீக்கி அவரை விடுதலைப் புலிகளுக்கு பலியாக்கதற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும்,அதனை தோல்வியடையச் செய்ய வேண்டும்என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
மாத்தறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே பாராளுமன்றஉறுப்பினர் டலஸ் அழகப்பெரும இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மஹிந்தவின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் அவதானத்திற்குஉரியது.
என்றாவது ஒருநாள் அவர் முதுமையடைந்து தானாகவே இறக்கும் வரை அவருக்குமட்டுமே இந்த நாட்டில உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும் டலஸ் அழகப்பெருமதெரிவித்துள்ளார்.
அதேபோல் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இந்த நிலைமை உள்ளதோடு, ஜனாதிபதிமைத்திரிக்கோ, பிரதமருக்கோ உயிர் அச்சுறுத்தல் இல்லை என்றும்குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை குறைத்து விடுதலைப் புலிகளின் இலக்கைஇலகுவாக்கும் விடயத்தை தற்போதைய ஜனாதிபதி செய்யக் கூடாது என்றும்தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மஹிந்தவின் செல்வாக்கை கவனத்திற் கொண்டு அவருக்கானபாதுகாப்பை வழங்குவதே ஜனாதிபதியின் கடமை என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ்அழகப்பெரும தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.