ஸ்காபரோ ரூச்ரிவர் கண்சவேட்டிவ் வேட்பாளர் ஏகமனதாகத் தெரிவு. உள்ளகத் தேர்தல் ரத்து?
இதனால் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவிருந்த வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த விபரங்கள் அத் தொகுதிவாழ் கட்சி அங்கத்தவர்களிற்கு அறியத்தரப்படும் எனவும் மேற்படி கட்சி தெரிவித்துள்ளது.
2018ம் ஆண்டு இரண்டாகப் பிரிபடப் போகின்ற இந்தத் தொகுதிக்கான இப்போதைய இடைத்தேர்தலில் யார் வெல்கின்றார்கள் என்பது கருத்தல்ல, எந்தக் கட்சி வெல்லப் போகின்றது என்பது தான் மாகாணத்தின் மற்றைய தொகுதிகளிற்கும் யாருடைய பக்கம் மக்களின் ஆதரவு இருக்கின்றது என்ற ஒரு செய்தியை சொல்லும் என்ற நிலையில்
முன்னேற்றவாதக் கண்சவேட்டிவக் கட்சியானது கடந்த இரண்டு மாதங்களில் மூன்று கருத்துக் கணிப்புக்களை இத் தொகுதி வாக்களர்களிடையே நடாத்தியிருந்தது. கடைசிக் கருத்துக் கணிப்பு கடந்த வார இறுதியில் இடம்பெற்றிருந்தது.
மூன்று கருத்துக் கணிப்புக்களிலும் சுமார் 40 வருடங்களாக லிபரல்கட்சியின் வசமுள்ள இந்தப் பிராந்தியத்தில் பழமைவாதக் கட்சி இடைத்தேர்தலில் வெற்றிபெறுவதானால் தொகுதிக்கு அறிமுகமான வேட்பாளரையே நியமிக்க வேண்டும் என்ற தெரிவு அதிக விழுக்காடு ஆதரவைப் பெற்றது.
அதாவது லிபரல் கட்சியின் தலைவர் மற்றும் அவர்களது போதைப் பொருட்கள் தொடர்பான கொள்கைகள் மீதான வெறுப்புத் தமக்கு இருந்தாலும், பழமைவாதக் கட்சிக்கு வாக்களிப்பதானால் தொகுதிக்கு அறியப்பட்டவராகவும், தொகுதிக்குச் சேவையாற்றியவராகவும் இருக்க வேண்டுமென்ற விருப்பு மூன்று கருத்துக் கணிப்புக்களிலும் தொகுதியிலுள்ள வாக்காளர்களால் வெளிக்காட்டப்பட்டிருந்தது.
தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கான தேர்தலாகக் கருதப்படும் 2018ம் ஆண்டுத் தேர்தலை வெல்வதற்கான அறிகுறியாக இந்த் தொகுதியை திரு. பற்றிக் பிறவுன் அவர்களது கட்சி வென்றேயாக வேண்டும் என்ற ஒரு கருத்தை பல தமிழர்களும் நிறையவே ஊடகவியலாளர்களும் ஆதரிக்கின்றார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
புதிய கண்சவேட்டிவ கனடியத் தமிழர்களிற்கு உறுதிமொழியாகவே தந்துள்ள விடயம் யாதென்றால் 2018த் தேர்தலில் தராதரமுள்ள தகுதியுள்ள தமிழர்களிற்கு என மூன்று வெல்லப்படக் கூடிய தொகுதிகளில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பமும், அரச நிர்வாக அலகு இயக்குனர்சபைகளில் தரமுள்ளவர்களிற்கு நியமனமும் என்ற உறுதி மொழி தாராளமாக வழங்கப்பட்டுவிட்டது,
மேற்படி கட்சி தனது வாக்குறுதியை நிறைவேறும் என்பதற்கான சாத்தியத்தை அந்த கட்சி எழு தமிழர்களை தனது கட்சியின் கட்டமைப்பிற்குள் தகுதியான பதவிகளிற்கு நியமித்ததும் இரண்டு தமிழ் இளைஞர்களை பணிக்கு அமர்த்தியதும் காட்டி நிற்கின்றது. இதுவரை எந்தக் கட்சியும் இவ்வாறானதொரு நிலைக்கு தமிழர்களை உயர்த்தவில்லை.