சத்யா நாதெள்ளாவை அசர வைத்த 8 வயது சிறுவன்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வான சத்யா நாதெள்ளாவை தனது அபார கண்டுபிடிப்பின் மூலம் அசர வைத்துள்ளான் 8 வயது சிறுவனான மேதன்ஷ் மேத்தா.
மும்பையை சேர்ந்த 8 வயது சிறுவனான மேதன்ஷ் மேத்தா ‘Let There Be Light’ என்ற புதிய ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளான்.
வெறுமென விளையாட்டு ஆப்பாக வடிவமைக்காமல், நாட்டின் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு பற்றி விளக்கும் வண்ணம் வடிவமைத்துள்ளான்.
அதாவது, நாணயங்களை சேகரிப்பதன் மூலம் நகரத்தில் தொழிற்சாலைகள், பண்ணைகளை உருவாக்க முடியும், இதன் மூலம் நகரை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லலாம் என்பதே நோக்கமாகும்.
சமீபத்தில் மைக்ரோசாப்ட் சிஇஓ-வான சத்யா நாதெள்ளாவை சந்தித்த மேதன்ஷ், தனது ஆப் பற்றி விளக்கியுள்ளான்.
அவன் குறிப்பிடுகையில், விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் வளர்ச்சியை சமமான நிலையில் கொண்டு செல்லும் போது மாசுவை கட்டுப்படுத்துவதுடன் பொருளாதார ரீதியாகவும் வளர்ச்சி அடைய முடியும் என தெரிவித்துள்ளான்.
இந்த பதிலால் அதிர்ந்து போன சத்யா நாதெள்ளாவிடம், நான் அடுத்த சிஇஓ-வாக என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளான்.
அதற்கு அவர், நிச்சயமாகஇந்த தலைமுறை குழந்தைகளால் சிஇஓ-வாக முடியும், அதற்கு நிறைய கோடிங் கற்க வேண்டும், குறிப்பாக நம்பிக்கை அதிகம் வேண்டும் என பதிலளித்துள்ளார்.