iPhone 7 வெளியீட்டில் அதிரடி தீர்மானம்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
கைப்பேசி பாவனையாளர்கள் பலர் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது iPhone 7 மற்றும் iPhone 7 Plus கைப்பேசிகளின் வெளியீட்டினைத்தான்.
இக் கைப்பேசிகள் அறிமுகம் செய்வதற்கு இன்னும் இருப்பது சில மாதங்களே.
இந் நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகி வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதாவது அப்பிள் நிறுவனம் எந்தவொரு கைப்பேசியினையும் அறிமுகம் செய்யும்போது அதில் வெவ்வேறு சேமிப்பு கொள்ளளவுகளைக் கொண்ட கைப்பேசிகளை அறிமுகம் செய்வது வழக்கமாகும்.
ஆனால் இம் முறை வழக்கத்திற்கு மாறாக 16GB சேமிப்பு கொள்ளளவினை உடைய கைப்பேசியினை நிறுத்தவுள்ளது.
இதன்படி iPhone 7 மற்றும் iPhone 7 Plus கைப்பேசிகளில் 32GB சேமிப்பு கொள்ளளவில் இருந்ததே அறிமுகம் செய்யப்படவுள்ளன.
இவற்றின் ஆகக் கூடிய சேமிப்பு கொள்ளளவு 256GB வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.