உலகின் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் அறிமுகம்!
SIRIN LABS நிறுவனம் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய Solarin என்ற ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மொபைலில் அமைக்கப்பட்டுள்ள encryption தொழில்நுட்பம் தனிநபர் தகவல்களை பாதுகாப்பில் முக்கிய பங்குவகிக்கிறது.
5.5 இன்ச் IPS LED தொடுதிரை கொண்ட இந்த மொபைலின் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு தொடர்பாக சுவீடன் மற்றும் இஸ்ரேலில் தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
இதில் நிறுவப்பட்டுள்ள புதிய மொபைல் அச்சுறுத்தல் பாதுகாப்பு மென்பொருள், சமீபத்திய இணைய அச்சுறுத்தல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
chip-to-chip256-bit AES encryption தொழில்நுட்பம் சிறந்த பாதுகாப்பை கொடுக்கிறது. இராணுவ தகவல் தொழில்நுட்ப துறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் இதில் வழங்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தவிர, Qualcomm’s Snapdragon 810 processor, 24 bands LTE compatibility ஆகிவற்றை கொண்டுள்ளது. 802.11ac2x2 MU-MIMO Wi-Fi தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளும் இது இணையத்தின் வேகத்தை 3 மடங்கு அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.
மேலும், WiGig™(802.11ad) multi-gigabit Wi-Fi தொழில்நுட்பம் இணையத்தின் வேகத்தினை 4.6 Gbps வரை சப்போர்ட் செய்யும்.
அதேபோல் Qualcomm’s Quick Charge technology இந்த போனின் பேட்டரியை மிக விரைவில் Charge கூடியதாக உள்ளது. autofocus மற்றும் true tone flash ஆகியவற்றுடன் கூடிய 23.8-megapixel கமெரா ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போனுக்கான அட்டகாச வடிவமைப்பை தொழில்துறை வடிவமைப்பாளர் கரீம் ரசீத் என்பவர் வடிவமைத்துள்ளார்.
பல்வேறு புதிய தொழில்நுட்பத்துடன் வெளிவரவிருக்கும் இந்த ஸ்மார்ட் மொபைலின் விலை அதிகமாகவே உள்ளது. இது சந்தைகளில் அனைத்து விலையும் சேர்த்து 12,000 பவுண்ட்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.