அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பயணத்திற்காக புதிய ஏர் ஃபோர்ஸ் ஒன் ஜெட் விமானங்களை வாங்க போயிங் 3.9 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன்படி டிரம்புக்காக வாங்கப்படும் புதிய விமானங்கள் அணுஆயுத போரினாலும் பாதிக்காதவாறு மிகஉயர்ந்த தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகிறது.
இதற்கான ஒப்பந்தம் போயிஸ் விமான நிறுவனத்துடன் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இரண்டு 747-8 ரக விமானங்களை வாங்க அமெரிக்க அரசு முடிவு செய்து உள்ளது. இந்த விமானங்கள் அமெரிக்க ஜனாதிபதியின் பயன்பாட்டுக்காக வாங்கப்படுவதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானங்கள் வரும் 2024ம் ஆண்டு டிசம்பருங்குள் வழங்கப்பட வேண்டும் என்றும் விமானம் சிவப்பு, வெள்ளை மற்றும் நீல வண்ணதில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானதாகவும், விமானத்தில் ஏற்கனவே இருப்பதை விட, பல மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகவும குறிப்பாக இரண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.
இந்த விமானம் அணு ஆயுதப் போர் போன்ற மிக மோசமான பாதுகாப்பு சூழல்களிலும் பறக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட உள்ளன. மேலும் அவை ராணுவ ஏவினிக்ஸ், மேம்பட்ட தொழில்நுட்ப தொடர்பு மற்றும் சுய-பாதுகாப்பு அமைப்புடன் மாற்றப்படும் என்றும் பென்டகன் தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் வெள்ளைமாளிகையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை மற்றும் முறைசாரா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை தொடர்ந்து, தற்போது இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட 2019 ம் ஆண்டுக்கான விமானப் படைகளின் பட்ஜெட்டில், இந்த விமானத் திட்டத்திற்கு $ 3.9 பில்லியன் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனேவ இதுகுறித்து டிரம்ப் தனது டுவிட்டரில் பதிவில், அவருக்கு பிடித்த நிறமான “சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் வண்ணத்திலான ஏர்போர்ஸ் தனக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.