சவுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது செய்யப்பட்டார். தைப் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடகர் மஜித் அல் மோகன்திஸ் பங்கேற்று பாடினால். அவரை கட்டிப்பிடித்ததன் காரணமாக பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சவுதி ஊடகங்களில் வெளியான செய்திகளில் “ தைப் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் மஜித் அல் மோகன் தாஸ் பாடிக்கொண்டிருந்தார். அப்போது அவரது பாடலை கேட்ட பெண் ஒருவர் மேடைக்கு ஓடிச்சென்று அவரை கட்டிப்பிடித்தார். உடனடியாக மேடைக்கு சென்ற பாதுகாவலர்கள் அந்த பெண்ணை அழைத்து சென்றனர் “ என்று கூறப்பட்டது.
கைது செய்யப்பட்ட பெண் மீது துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் அவருக்கு குறைந்த பட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று உள்ளூர் ஊடக வட்டங்கள் தெரிவித்துள்ளன.
சவூதி அரசு கடந்த சில நாட்களாக பெண்களுக்கு வாகனம் ஓட்டவும், தொழில் நிறுவனம் தொடங்கவும் அனுமதி அளித்துள்ளது. சவுதியில் உள்ள பெண்களின் வாழ்க்கை தரம் முன்னேறி வரும் வேலையில் இத்தகைய கைது நடவடிக்கையை மகளிர் அமைப்புகள் விமர்சித்து வருகின்றன.