தாய்லாந்தில் குகையில் மீட்கப்பட்ட மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தாய்லாந்தில் கடந்த ஜூன் 23ல், , உள்ளூர் பள்ளி ஒன்றின் கால்பந்து அணி வீரர்கள், பயிற்சியாளருடன் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள, தாம் லுவாங் குகைக்கு சுற்றுலா சென்றனர். அப்போது பெய்த மழையால், குகைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால், 13 பேரும் குகைக்குள் சிக்கினர். இதனையடுத்து அவர்களை மீட்கும் பணியில், தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
சிறுவர்களை மீட்பதற்கான முக்கிய நடவடிக்கை இன்று துவங்கியது. பல கட்டங்களாக நடந்த இந்த பணியில் 12 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இந்நிலையில் சிகிச்சை முடிந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். பின்னர் வைல்டு போர்ஸ் என்ற தங்கள் அணியின் டி சர்ட்டுகளுடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
அப்போது சிறுவன் கூறுகையில், எங்களை காப்பாற்ற வந்தவர்களை முதன் முதலில் பார்த்த போது தங்களால் நம்பவே முடியவில்லை குகையில் பாறை வழியாக வந்த நீரை குடித்து உயிர் வாழ்ந்தோம். எங்களை மீட்கும் முயற்சியில் கடற்படை வீரர் குனான் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது என்றார்.