பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பாக நடமாட வேண்டுமானால் பாலியல் குற்றச் சாட்டுக்களுக்கும் தூக்குத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்ததாவது,
இலங்கையில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்த அரசு தூக்கு தண்டனையை நடைமுறைப்படுத்தவுள்ளது.அரசின் இந்த முடிவை நான் வரவேற்கின்றேன்.ஏனெனில் அண்மைக் காலமாக வடக்கு மாகாணம் உட்பல பல இடங்களில் போதை பொருள் பாவனை மற்றும் கடத்தல்கள் அதிகமாக உள்ளன.அவற்றிற்கு துணையாக உள்ள குற்றவாளிகள் இனம் கண்டு தண்டிக்கப்பட வேண்டும்.போதை பொருள் பாவனை காரணமாகவே பல சமூக விரோத செயல்கள் இடம்பெறுகின்றன.போதை பொருளை கட்டுப்படுத்த தூக்குத் தண்டனை கொண்டுவரப்பட்டுள்ளது.அதேபோல வன்புணர்வு குற்றத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் அப்போதுதான் பெண்களும் பாடசாலை சிறுவர்களும் பாதுகாப்புடன் வாழ முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.