பொலிஸார் கைது செய்வதற்கு தேடி வரும் பிரபல பாதாள உலக உறுப்பினர்கள் ஐவர் பிரபல அமைச்சரவை அங்கீகாரம் உடைய அமைச்சர் ஒருவரின் பாதுகாப்புப் பிரிவில் சேவையாற்றி வருவதாகப் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பான தகவல்கள் திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவுக்குக் கிடைத்துள்ள போதிலும் பிரபல அமைச்சர் ஒருவரின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோத்தர்கள் என்பதால் அவர்களைக் கைது செய்வதில் பொலிஸார் தாமதம் காட்டுவதாக தலைமையகத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த 5 பாதாள உலக உறுப்பினர்களும் குறித்த அமைச்சரின் தனிப்பட்ட பாதுகாப்புப் பிரிவில் சேவையாற்றும் ஒளிப்படத்துடன் கூடிய ஆதாரங்கள் திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவுக்கு கிடைத்துள்ள போதும் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.