உயிருக்கு போராடும் 7 வயது ஏழை சிறுமி: ரூ.80 லட்சம் நிதி திரட்டிய பொதுமக்கள்
கனடா நாட்டில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் சிறுமி காப்பாற்ற பொதுமக்கள் 80 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டியுள்ளது உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள Tuscany Glen Park என்ற நகரில் 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தந்தை வெளியே புறப்படுவதற்காக காரை எடுத்துள்ளார்.
அப்போது, வெளியில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி மீது கார் பலமாக மோதியதில் சிறுமி படுகாயம் அடைந்துள்ளார்.
உடனடியாக சிறுமியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் இன்னும் அபாயக் கட்டத்தை தாண்டவில்லை.
மகளின் உயிரை காப்பாற்ற பெற்றோருக்கு போதிய வருமானம் இல்லாததால், இணையத்தளம் மூலமாக விவரத்தை பதிவு செய்து நிதி கோரியுள்ளனர்.
பெற்றோரின் சூழல் மற்றும் சிறுமியின் உடல்நிலைக் குறித்து தகவல் அறிந்த அல்பேர்ட்டா மாகாண பொதுமக்கள் நிதியளிக்க தொடங்கியுள்ளனர்.
இரண்டு நாட்களாக திரட்டிய நிதியில் இதுவரை 55,000 டொலருக்கும்( 81,32,025 இலங்கை ரூபாய்) அதிகமாக சேர்ந்துள்ளது.
இது குறித்து நிதி திரட்டி வரும் நபர் ஒருவர் கூறுகையில், எதிர்பாராத விபத்துக் காரணமாக சிறுமி ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக அறிந்து சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கு உதவும் வகையில் இந்த பணியை செய்து வருகிறோம்.
அல்பேர்ட்டா மாகாண மக்கள் எவ்வித தயக்கமும் இன்றி நிதியை வழங்கி வருவது சிறுமியின் உயிரை பிழைக்க வைத்து விடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.