ஒரே தடவையில் 22 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைக்கிறது இஸ்ரோ
வரும் ஜூன் மாதம் ஒரே தடவையில் 22 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைக்க உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக வர்த்தக மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் இதை இன்று அவர் தெரிவித்தார்.
இந்த செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு பி.எஸ்.எல்.வி சி.34 ராக்கெட் பயன்படுத்தபட உள்ளது. இதில், 3 இந்திய செயற்கைக்கோள்களும், ஏனையவை அமெரிக்கா, கனடா, இந்தோனேசியா, ஜெர்மனி நாடுகளின் செயற்கைகோள்களும் ஆகும்.
இதற்கு முன்னதாக கடந்த 2008-ம் ஆண்டு ஒரே தடவையில் 10 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்திருந்தது இஸ்ரோ.
f