ஃபோர்ட் மக்முர்ரே காட்டுத் தீ: அமெரிக்க தீயணைப்பு படையினர் கனடா வருகை
அல்பேட்டாவின் ஃபோர்ட் மக்முர்றி பகுதியில கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக அமெரிக்க தீயணைப்பு படை வீரர்கள் கனடாவிற்கு வருகை தந்துள்ளனர்.
இதன்பிரகாரம் 200 தீயணைப்பு படை வீரர்கள் கனடா வந்தடைந்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் கடந்த புதன்கிழமை அமெரிக்காவிலிருந்து புறப்பட்டதாகவும் அமெரிக்க தேசிய தீயணைப்புத் துறை உறுதி செய்துள்ளது.
இவர்களுடன் அமெரிக்காவின் நில முகாமைத்துவ திணைக்களம், வனவளத் திணைக்களம் மற்றும் வன விலங்குகள் மற்றும் மீன் வளத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் போது கடந்த ஐந்து ஆண்டுகளாக கனேடிய தீயணைப்பு படை வீரர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில் அமெரிக்க தீயணைப்பு வீரர்கள் கனடாவிற்கு வருகை தந்துள்ளமை இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.