கடத்தப்பட்ட சிறுமியை தொடர்ந்து தேடிவரும் பொலிஸார்
கலிபோனியாவில் இவ்வார ஆரம்பத்தில் கடத்தப்பட்டு, தற்பொழுது காணாமல் போயுள்ள சிறுமியை தேடும் பணியில் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் தேடல் நடவடிக்கை இன்றும் தொடர்ந்து இடம்பெறுகின்றது.
பேர்ல் பின்சன் எனப்படும் 15 வயது சிறுமி இவ்வாற ஆரம்பத்தில் மேம்பாலம் ஒன்றில் வைத்து 19 வயதுடைய இளைஞர் ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் அச்சிறுமியை பொலிஸார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில், கடத்தல்காரரை பொலிஸார் கடந்த புதன்கிழமை லொஸ் அலமொஸில் சுட்டுக் கொன்றனர்.
அதனைத் தொடர்ந்து சிறுமி எங்கு உள்ளார் என்ற விடயம் தெரியாமல் தொடர்ந்து தேடப்பட்டு வருகின்றார். பொது இடங்கள், மறைவான இடங்கள் என பல இடங்களிலும் அவரைத் தேடிய பொலிஸார், தற்பொழுது ஆறுகள் மற்றும் காட்டுப் பகுதிகளிலும் தமது தேடல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த சிறுமியைத் தேடுவதற்கு உதவி கோரியுள்ள பொலிஸார் அம்பர் எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர்.