தற்போது மலையாளத்தில் உருவாகிவரும் ‘மாமாங்கம்’ என்கிற வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி. 17ஆம் நூற்றாண்டில் நடைபெறும் இந்த கதையில் சேகவர் என்கிற கேரக்டரில் நடிக்கிறார் மம்முட்டி. சுமார் 3௦ கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்தப்படத்தை அடூர் கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சஜீவ் பிள்ளை என்பவர் இயக்குகிறார்
இந்தப்படத்தில் கதாநாயகியாக முக்கிய வேடத்தில் நடிக்க சமீபத்தில் பாலிவுட் நடிகை பிரச்சி தேசாய் ஒப்பந்தமாகி இருக்கிறார் என தகவல் வெளியானது. இந்தநிலையில் ஹிந்தி சீரியல் நடிகையும் இந்திய தேசிய நெட்பால் அணியின் முன்னாள் கேப்டனுமான பிரச்சி டெஹ்லான் என்பவரும் இன்னொரு கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.