வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் கோவில் யாழ்நகரில் வைத்தியசாலையின் கிழக்குப் பக்கமாக சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 1665 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. மிகவும் பழமைவாய்ந்த இவ்வாலயம் தாயகத்தில் நடந்துமுடிந்த போராட்ட காலங்களில் மிகவும் சிதைவடைந்த நிலையில் இருந்ததனை நாம் அறிவோம். புனருத்தாரனங்கள் செய்யப்பட்டு இருந்தாலும் ஆலயத்தில் உள்ளக நிலைமை மிகவும் மோசமானதாகவே காணப்படுகின்றது. எனவேதான் ஆலயத்தினை புதுப்பொலிவுடன் மீண்டும் கொண்டுவரும் நோக்குடன் இங்குள்ள ஒரு சிலரின் முயற்சியினால் நிகழ்ச்சியாக நடைபெற தீர்மானிக்கப்பட்டு வருகின்ற சனிக்கிழமை (2016-05-14) சரியாக கனடாவில் முன்னணி இசைக்குழுவாக திகழ்ந்துவரும் மெகா Tuners இசைக் குழுவினரின் அசத்தலான இசை அமுதத்தில் உலக இளம் சூப்பர் சிங்கர் என வர்ணிக்கப்படும் சாய் விக்னேஷ் அவர்களுடன் கனேடிய பாடகர்களும் சேர்ந்து இசை மழை பொழிய இருக்கின்றார்கள். மெகா இசைக்குழுவின் தலைவர் அரவிந்தன் அவர்கள் கனடா வருகின்ற சகல தென் இந்திய பின்னனிப்பாடகர்களுக்கும் இசை வழங்கி பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டவர்கள். எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் பிரபல பின்னணி பாடகர்களான சௌந்தரராஜன் மற்றும் சுசிலா அவர்கள் பங்கு பற்றிய நிகழ்வு ஒன்றில் சுசிலா அவர்களுக்கு தங்க வளையல் வழங்கி கௌரவிக்கப்பட போது அந்த தங்க வளையத்தினை உடனடியாக அரவிந்தனுக்கு வழங்கி அவர்களுக்கே இந்த மரியாதையும் கௌரவமும் வழங்கப்பட வேண்டுமென அரவிந்தனின் திறமையினை பாராட்டி பேசியதையும் இன்றைய இந்நாளில் நினைவு கூருவது சாலச் சிறந்ததாகும். ஆகவே சிறந்த இசை குழுவின் அசத்தலான இசை அமுதத்தில் சாய் விக்னேசின் துல்லியமான காந்த குரலில் காற்றோடு கலக்க இருக்கின்ற சிறப்பான பாடல்களினை கண்டுகளிக்க திரண்டுவந்து யாழ் வண்ணை ஸ்ரீ வெங்கடேஷ வரதராஜ பெருமாள் கட்டிட நித்திக்கு தாராளமாக உதவி செய்வதுடன் நிகழ்ச்சியினையும் கண்டுகளித்து இன்பம் கலந்த சந்தோசத்துடன் வீடு திரும்புமாறும் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் ஆலயத்தின் வரலாறு பற்றி பார்ப்போமாயின் ஆலயத்தின் முதலாவது கொடியேற்றம் 1878 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆலய மணிக்கோபுரம் 1971 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆலயத்தில் கிழக்கு வீதியில் உள்ள லக்ஷ்மி நாராயணன் கல்யாண மண்டபம் 2000ஆம் ஆண்டளவில் அன்றைய ஆலய அறங்காவலர் சிவலோகநாதன் தலைமையில் கட்டப்பட்டு பாலசிங்கம் அவர்களால் 26 ஆகஸ்டு 2000 இல் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் இரண்டாவது கோபுரம் 1971 ஆண்டு கட்டப்பட்டது. இது 2003 ஆம் ஆண்டில் புனருத்தாபரணம் செய்யப்பட்டது. ஆலயத்தின் தேரடியில் உள்ள அனுமார் விக்கிரகம் 2003 ஆம் ஆண்டு வைக்கப்பட்டது. யாழ் நகரில் உள்ள ஒரே விஷ்ணு ஆலயம் வண்ணை ஸ்ரீவேங்கடேச வரதராஜ பெருமாள் கோயில். இது குணபூஷண சிங்கை ஆரியன் என்ற மன்னன் யாழ்ப்பாண இராச்சியத்தையும் ஆட்சிசெய்தபோது தென்னிந்திய நெசவா ளர்களுக்குத் தொழில் கொடுப்பதற்காகவும் யாழ்ப்பாணத்தில் நெசவுத் தொழில் மூலம் மக்களின் ஆடைகளின் தேவையை நிறைவேற்றுவதற்கும் சில நெசவாளர் குடும்பங்களை இங்கு கொண்டுவந்து குடியேற்றினார்கள். தென்னிந்தியாவில் காரைக்கால் என்ற ஊருக்கு அருகேயிருந்த குடும்பங்கள் சில இங்கு குடியேற்றப்பட்டன. இவர்கள் காருகவினைஞர்கள் என்ற சிறந்த நெசவாளர்கள். இவர்கள் தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். யாழ் ப்பாணத்தில் குடியேறியவர்களும் தெலுங்கை வீடுகளில் பேசும் மொழி யாகக் கொண்டிருந்தனர். காரைக்காலுக்கு அடுத்த திருமலைராயன் பட்டணத்திலி ருந்தே பெரும்பாலான குடும்பங்கள் இங்கு குடியேறியதாக சொல்லப் படுகிறது. இங்குவந்த குடும்பங்களில் ஒருவர் விஷ்ணு பக்தர். அவர் வரும்பொழுது சீதேவி பூதேவி சமேத சமேத நாராயணன் வீற்றிருக்கும் சிறிய பித்தளை விக்கிரகமொன்றைக் கொண்டு வந்து அவர்கள் குடியேறிய இடத்திலிருந்த ஒரு பலா மரத்தின் கீழே வைத்து வணங்கி வந்தார். அந்த இடத்தில்தான் இன்று இரண்டு பெரிய அழகான சிற்பங்கள் நிறைந்த கோபுரங்களுடன் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் என்ற பெயருடன் விஷ்ணு ஆலயம் மிளிர்ந்து கொண்டிருக்கிறது. குடியேறியவர்கள் தெலுங்கு மொழியை பேசுமொழியாகக் கொண்டு வாழ்ந்தனர். அவர்கள் மிக சிறந்த சேலைகள், வேட்டிகள், போர்வைகள், விரிப்புகள் என ஆடைகளை உற்பத்தி செய்தனர். இன்று பெருமாள் கோயில் என வழங்கப்படும் இப்பகுதி சேணிய தெரு என்றும் பெயர் பெற்றிருந்தது. முன்பெல்லாம் விஷ்ணு பக்தர்கள் இங்கு நெற்றியில் நாமம் வைத்திருப்பார்கள். இப்பொழுது கோயிலிலுள்ள சுவாமிகளிலும் வாகனங் களிலும் கோபுர பொம்மைகளிலும்தான் நாமத்தைக் காணலாம். திருமண் என்று வழங்கப்படும் நாமத்துக்குப் பதிலாக சிவ பக்தர்கள் தரிக்கும் திருநீறே இங்கு அனைவரும் நெற்றியில் தரிக்கிறார்கள். ஆனால் இக்கோயிலில் சிவனுக்கோ மால் மருகன் முருகனுக்கோ ஒரு பிரகாரமோ விக்கிரகமோ இல்லாதது பெரும் குறை. இங்கு ஒரு சந்நிதானத்தில் வெற்றிவேல் முருகனுக்கு ஓர் இடம் இருந்தால் அடியார்கள் அனைவரும் திருப்தியடைவார்கள்.
Langes, FCPA, FCGA
tamilbc.ca