ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள 20 இற்கும் மேற்பட்ட பின்னாசன பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் மனக் கவலையுடன் உள்ளதாக ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
பிரதமருடைய எந்த நிகழ்விலும் இவர்கள் கலந்துகொள்ளப் போவதில்லையென்ற தீர்மானத்திலும் இவர்கள் உள்ளனர். இவ்வாறே கட்சி பயணித்தால் கட்சிக்குள் பாரிய வெடிப்பு ஏற்பட்டுவிடும்.
ஐக்கிய தேசியக் கட்சியைப் போன்று குழுக்கள் அமைக்கும் கட்சியொன்று உலகில் எங்கும் இல்லை. இதனால், குழு என்ற சொல்லைக் கேட்கும் போது மக்கள் சிரிக்க ஆரம்பித்துள்ளனர். எனக்கும் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றைப் பற்றிப் பேசுவதனால், அப்பொறுப்புக்கள் பறிபோனாலும் பரவாயில்லை. உண்மையைக் கூறுவதற்கு வேண்டியுள்ளது.
தேர்தலின் போது வெற்றி பெறுவதே எமது நோக்கம். நாம் மக்களின் முன்னாள் தேர்தலுக்கு சென்றால் எம்மைக் காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். எனக்கென்றால், கட்சியின் நடவடிக்கைகள் உண்மையிலேயே வெறுப்படைந்துள்ளன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.