இந்தியாவும், சீனாவும் இணைந்து ஆப்கனில் பொருளாதார திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக கூறப்படுவதாவது: ஆப்கனில், பொருளாதார திட்டங்களை செயல்படுத்த பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கும் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் உதவி தேவைப்படும், 3வது நாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்கி, ஒருங்கிணைந்து செயல்பட இரு நாடுகளால் முடியும். எங்கெங்கு உதவி செய்ய முடியுமோ, அங்கெங்கெல்லாம் உதவி செய்யப்படும். வுஹான் மாநாட்டிற்கு முன், ஆப்கன் விவகாரத்தை கையாளும் இந்திய அதிகாரிகளை அழைத்து சீன அதிகாரிகள் இது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.