எட்டாவது நாடாளுமன்றத்தின், இரண்டாவது அமர்வு நாளன்று (மே-08) பெரியளவு பணத்தைச் செலவு செய்வதற்கு நாடாளுமன்றம் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளை நிராகரித்துள்ள சபாநாயகரின் ஊடகப் பிரிவு, எவ்வித மேலதிக செலவுகளும் ஏற்படப்போவது இல்லையென வலியுறுத்தியுள்ளது.
அன்றைய தினம் பிற்பகல் வேளையிலேயே (2.15) நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகும் என்பதோடு, உறுப்பினர்களுக்கோ அல்லது ஊடகவியலாளர்களுக்கோ மதிய உணவோ, அல்லது மேலதிக உணவு வகைகளோ வழங்கப்படமாட்டாது எனவும் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும், உறுப்பினர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் தேநீர் மற்றும் சிற்றுண்டி ஆகியன மாத்திரமே வழங்கப்படும் எனவும், அன்றைய தினம் (மே-08) வழமையான செலவுகளுக்கு மாறாக மேலதிக செலவுகள் எதுவும் ஏற்படப்போவது இல்லை எனவும் சபாநாயகரின் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.