பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை நடைபெறவுள்ள குழுக்களின் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும், இக்கலந்துரையாடலின் பின்னர் கூட்டு எதிரணியின் கருத்தை வெளியிடவுள்ளதாகவும் மஹிந்த அணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்ஷா தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவராமல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் மாத்திரம் மாற்றம் கொண்டுவருவது பொருத்தமான நடவடிக்கையல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.