கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல்லில் வீக்கெண்டு என்றாலே டபுள் தமாக்கா தான். அதிலும் இன்றைய போட்டியின் கேப்டன்கள் இருவரும் சென்னைப் பசங்க!. தமிழகத்துக்காக பல ஆண்டுகள் ஒரே அணியில் டொமஸ்டிக் சீசன் விளையாடும் போட்டி. அதிலும் இருவரும் தமிழகத்துக்காக கேப்டனாக இருந்தவர்கள். தற்போது இருவரும் கேப்டன். பஞ்சாப் தமிழன் வெர்சஸ் கொல்கத்தா தமிழன் தான் இந்த மேட்சின் ஒரே ஹைலைட்.. இரு கேப்டன்களும், தங்கள் டீம்களை டாப் 4ல் வைத்திருந்தது சிறப்பு.
கடந்த போட்டியில் பேட்டிங் தேர்வு செய்து வெற்றி பெற்றிருந்தாலும், மீண்டும் ஃபீல்டிங் சென்டிமென்ட்டில் தஞ்சம் புகுந்துவிட்டார் அஸ்வின். டாஸ் வென்றதும், சேஸிங் தேர்வு செய்தார். கடந்த போட்டியில் விக்கெட் வீழ்த்தியிருந்தாலும், ரன்களை வாரி வழங்கிய மோஹித் ஷர்மாவுக்கு பதில், ராஜ்பூத்தை தேர்வு செய்திருந்தார். தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா வெற்றிக் கூட்டணியை மாற்றாமல் அப்படியே களமிறங்கியது.