இந்நிலையில், மீண்டும் இலங்கையை அண்மித்த ஆழ் கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் புத்தர் சிலை மீட்கப்பட்டுள்ளது.இது காலியை சேர்ந்த மீனவர்கள் சிலரினால் மீட்கப்பட்டுள்ளது.
மிதந்து வந்த புத்தர் சிலை மியன்மார் நாட்டிற்கு சொந்தமானதென சந்தேகிக்கப்படுகின்றது. புத்தர் சிலையுடன் மேலும் சில சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட சிலைகள் காலி, கச்சிவத்தை புராதன விகாரையில் வைக்கப்பட்டுள்ளதுமியன்மாருக்கு சொந்தமான இந்த சிலைகள் செழிமைக்காக பிரார்த்தனை செய்து கடலில் மிதக்க விடப்பட்டுள்ளதாக விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.அது மியன்மார் நாட்டவர்களின் கலாச்சாரமாக கருதப்படுகின்றது.கடந்த சில தினங்களுக்கு முன்னர், காலியை அண்மித்த கடற்பகுதியில் சிலை ஒன்றும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.