கனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு மணவாளக்கோல மகா சங்காபிஷேக னியாக்ல்வுகள் இன்று மண்டபம் நிறைந்த விநாயகர் பக்தர்கள் சூழ்ந்திருக்க இனிதே நடந்தேறியது. காலை ஒன்பது மணியில் இருந்து மதியம்வரை பல்வேறுவிதமான மூல மூர்த்திகளுக்கான விஷேட அபிஷேகங்களுடன் கூடிய தீப ஆராதனைகளும் நடந்தேறியது.
‘கோயில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற சான்றோர்களின் வாக்கிற்கு அமைய பிறம்டன் மாநகரில் இங்குள்ள சைவ மக்களின் நலன்கருதி இன்றயதினத்தில் பலவருடங்களிட்கு முன்னர் விநாயகப்பெருமானுக்கு ஆலயம் ஒன்றை என்றும் இறைபணியில் தங்களை முழுமையாக அற்பணித்துவரும் இரா விஜயநாதன் அவர்கள் இந்த ஆலயத்தினை அமைத்தார்கள். இவ்வாலயத்தில் உள்ள மூலமூர்த்திக்கு பறாளாய் விநாயகப்பெருமானின் பெருமையும் பிரதிபலிக்கும் முகமாக ஸ்ரீ கற்பக விநாயகர் எனப் பெயர் சூட்டப்பட்டது. வருடாந்த மணவாளக்கோல உற்சவம் இன்று 02-04-2016 காலையில் 1008 சகஸ்ரசங்காபிஷேகம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா பக்தர்கள் புடைசூழ மிகசிறப்பாக நடைபெற்றது. வசந்த மண்டப பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வசந்த மண்டப பூஜை தொடர்ந்து அமிர்தாலயா நுண்கலைக்கல்லூரி அதிபர் “பரதகலா வித்தகர்” “ஆசிரியைமணி” ஸ்ரீமதி லலிதாஞ்சனா கதிர்காமன் அவர்களின் மாணவிகள் பங்குபற்றிய மிகவும் சிறப்பான நடனங்கள் கண்களுக்கு விருந்தாகின. பங்குபற்றிய ஆறு மாணவிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதினை நிருபிக்கும் பொருட்டு மிகவும் அசத்தலாக தங்களது அதி உச்ச திறமையினை வெளிக்காட்டி அனைவரிரனதும் பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டனர். குறிப்பாக மிகவும் சிறப்பான கீர்த்தனைகள் நிறைந்த பாடல்களை தெரிவு செய்தது அந்த பாடல்களின் வரிகளுக்கு ஏற்ப முக பாவனைகளுடன் கூடிய அபிநயங்களை வெளிக்காட்டியவிதம் ஆசிரியை அவர்களின் சிறந்த கற்பித்தலுக்கு வழிசமைத்தது. பங்குபற்றிய அனைத்து மாணவிகளும் பரத நாட்டிய மேதை ஆவதற்கென்றே அவதாரம் எடுத்துள்ளாரோ என எண்ணும் அளவிற்கு வெகு இலகுவாக வளைந்து நெளிந்து ஆடவல்ல மெல்லிய உடல் வாகையும், அபிநயங்களை மிக லாவகமாக அபிநயிக்கக் கூடிய அழகான முக எழிலையும் கொண்டு அழகு தேவதை போன்றே காட்சியளித்தார்கள். தொடர்ச்சியாக நடந்து முடிந்த இடைவிடா நடன விழாவில் பரத நாட்டியத்தின் முக்கிய அம்சங்களான புஷ்பாஞ்சலி, கௌத்தம், ஜதீஸ்வரம், சப்தம்,வர்ணம், காவடி சிந்து, கீர்த்தனம், பதம், தில்லானா ஆகிய அனைத்து உருப்படிகளுக்கும் அணுகளவேனும் அப்பழுக்கின்றி அபிநயித்து ஆடி ஜமாய்த்து போன்ற உணர்வுகளை அப்படியே ஓர் பரத நாட்டிய அரங்கேற்றத்தில் வழங்குவது போன்ற ஓர் உணர்வினை இன்றைய ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய நாட்டிய உபசார நிகழ்வுகள் வழங்கியது என்றால் அது மிகையாகாது. சிறப்பான பரத நாட்டிய விருந்தினை முற்று முழுதாக ரசித்து மகிழ்ந்த திருப்தியோடு ரசிகர்கள் கலைந்து சென்றதை காண முடிந்தது. இறுதியில் கனேடிய மத்திய பாராளுமன்ற உறப்பினர்கள் வழங்கிய கௌரவ சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஆலயதர்மகர்த்தா இரா விஜயநாதன் அவர்கள் சான்றிதல்களை வழங்கினார்கள். இன்றைய நாட்டிய நிகழ்வினை திட்டமிட்டு ஒழுங்கமைத்து கௌரவ சான்றிதல்களையும் வழங்குவதற்கு சேவைகள் வழங்கிய இலங்கேஸ் அவர்களுக்கும் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் ஆலயம் சம்பந்தமாக நிகழ்வுகளில் பதிவுகளை சிறந்த கட்டுரைகள் மூலம் பக்தர்களுக்கு கொண்டு செல்வதற்காகவும் இலங்கேஸ் அவர்களுக்கு னர்கள் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் மிகவும் சிறப்பான அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.
Langes, FCPA, FCGA