தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் பத்து அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், எதிரணியில் இணையவுள்ள அவர்களையும் இணைத்துக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான பரந்த மக்கள் கூட்டணியொன்றை உருவாக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த கூட்டணியில் இலங்கையின் குடிமகன் யாராகவிருந்தாலும் இணைந்துக் கொள்ளலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.