செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீடியா ஃபைல்களை தெரியாமல் அழித்துவிட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் வரும் ஜிப், வீடியோக்கள், ஆடியோக்கள் ஆகியவை ஒருமுறை பதிவிறக்கம் செய்யப்பட்டால் செல்போனில் சேமிக்கப்பட்டுவிடும். சேமிக்கப்பட்ட ஃபைல்களை தெரியாமல் அழித்துவிட்டால் அவற்றை மீண்டும் வாட்ஸ் ஆப்பில் சென்று பதிவிறக்கம் செய்யமுடியாது. இந்த பிரச்சனை தீர்க்கும் விதமனாக மீடியா ஃபைல்களை மறுபதிவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதி ஆண்ட்ராய்டு வாட்ஸ் ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.