பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளவதற்கு லன்டன் சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனப்பிரச்சினை விவகாரத்தில், சர்வதேச நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்பது குறித்தும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் திர்மானங்கள் அவசியமற்றவை எனவும் வெளியுலக இராஜதந்திரிகளுக்கு எடுத்துக் கூறுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் மூத்த அரசியல் ஆலோசகர்கள் சிலர் ஜனாதிபதியுடன் லன்டன் சென்றுள்ளதாகவும், அங்கு நடைபெறவுள்ள சிறிய கூட்டங்களில், அவர்கள் இது குறித்து விளக்கமளிப்பார்கள் என்றும் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.